Wed. Jul 16th, 2025

மத்திய கல்லூரி அணியினருக்கான கால்பந்தாட்டம் சமநிலையில் முடிவடைந்தது

நெல்லியடி பழைய மாணவர் சங்கத்தின் லண்டன் கிளையின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட 20 வயதிற்கு ஆண்களுக்கான மத்திய கல்லூரி அணிகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

நெல்லியடி பழைய மாணவர் சங்கத்தின் லண்டன் கிளையின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட நெல்லியடி மத்திய கல்லூரி மற்றும் யாழ் மத்திய கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று புதன்கிழமை நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
20 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். இரு அணிகளின் பந்து பரிமாற்றம் மிகச் சிறப்பாக அமைந்தது. பாடசாலை வீரர்களை தாண்டி கழக வீரர்கள் போல இரு அணிகளும் மோதினர். இதனால் ஆட்டம் ஆரம்பம் முதல் இறுதி வரை இரு அணிகளும் கோல் எதனையும் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் ஆட்டம் சமநிலையில் நிறைவடைந்தது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்