Sun. Dec 8th, 2024

மத்தியின் மகுடம் கிண்ணத்துக்கான இறுதி ஆட்டம் நாளை

ஆவரங்கால் மத்தி விளையாட்டு கழகம் நடாத்தும் மத்தியின் மகுடம் கிண்ணத்திற்கான கிரிக்கெட் தொடரின் இறுதியாட்டம் நாளை  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலய மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இறுதியாட்டத்தில் குஞ்சர்கடை கொலின்ஸ் அணியை எதிர்த்து ஆனைக்கோட்டை யூனியன் அணி மோதவுள்ளது.
மத்தியின் மகுடம் கிண்ணத்திற்கான தலைவர் எழில்வேந்தன் தலைமையில் நடைபெறும்
இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வலிகாமம் கல்வி வலய சேவைக் கால உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ந.கஜேந்திரன்,  சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாவட்ட துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கா.சுதாகரன்,  ஓய்வு நிலை இடைக்காடு மகா வித்தியாலய ஆசிரியர் பொ.தவராஜா, பா.சுந்தரரூபன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்னர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்