மதுபோதையில் தொடா் அட்டகாசம், 4 தடவைகள் தற்கொலை முயற்சி இறுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்.
நிறைந்த மதுபோதையில் வீட்டாருடன் குழப்பம் விளைவிப்பதுடன், 4 தடவைகள் தற்கொலை செய்வதற்கு முயற்சித்த இளைஞன் நேற்றய தினம் மதுபோதையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.
இந்த சம்பவம் நேற்றய தினம் திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் த.சசீபன் (வயது24) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். தினமும் மது போதையில் வீட்டில் தகராறில் ஈடுபடும் குறித்த இளைஞர் ஏற்கனவே 4 தடவைகள் தற்கொலைக்கும் முயன்ற நிலையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் கையில் கயிற்றுடன் வீட்டில் இருந்த தாய் , தந்தை சகோதரம் ஆகியோரை விரட்டியடித்ததோடு
தற்கொலை செய்யப்போவதாகவும் அச்சுறுத்தியுள்ளார். இவ்வாறு விரட்டியதன் காரணமாக தாய், தந்தை அயலில் உள்ள வீட்டில் தங்கி நின்று இரவு 8.30 மணியளவில் வீடு திரும்பிய சமயம் குறித்த இளைஞர் படுத்திருந்துள்ளாா். எனினும் உறக்கத்தில் இருப்பதாக எண்ணியுள்ளனர்.
இருப்பினும் 9.30 மணியளவில் தாயார் சென்று உணவு வழங்குவதற்காக எழுப்பியுள்ளார். அதன்போது எந்தவிதமான அசைவும் இன்றிக் காணப்பட்டதனால்.வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சமயம் குறித்த இளைஞன் உயிரிழந்திருந்தமை உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு உயிரிழந்த இளைஞனின் கழுத்தில் கயிறு
இறுக்கிய அடையாளம் மட்டும் காணப்பட்டது. இதேநேரம் குறித்த இளைஞனின் மரண விசாரணை நேற்றைய தினம் இடம்பெற்ற சமயம் தாய் மற்றும் மூத்த சகோதரன் ஆகியோர் கழுத்தில் அடையாளம் காணப்பட்டாலும் கயிறு பிறிதொரு இடத்திலேயே காணப்பட்டது.
அவ்வாறு காணப்பட்ட கயிறும் நிலத்தில் காணப்பட்டதனால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். இதன் காரணமாக மரண விசாரணையை மேற்கொண்ட நமசிவாயம் – பிறேம்குமார் சடலத்தை பிரேதபரிசோதனைக்கு ஒப்படைக்க கோரியதோடு பரிசோதனையின் பின்னர் வழங்கப்படும் சடலமும் புதைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.