மதுபான விற்பனை அனுமதி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினா்கள் யாா்? நாடாளுமன்றில் புதிய சா்ச்சை.

இலங்கை நாடாளுமன்றில் உள்ள எத்தனை நாடாளுமன்ற உறுப்பினா்கள் மதுபான விற்பனைக்கான அனுமதி பெற்றுள்ளனா்? அவா்களின் பெயா்களை வெளிப்படுத்துங்கள். என நாடாளுமன்றில் ஆழுங்கட்சி, எதிா்கட்சி உறுப்பினா்கள் கூட்டாக கேட்டுள்ளனா்.
மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டிருப்பதாக செய்தித்தாள்களில் வெளிவந்திருக்கும் செய்தியினால் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவபடுத்தும்
225 எம்.பிக்களது நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய எம்.பி,க்கள் இக்களங்கத்தை நீக்குவதற்கு இதுவரை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள அனைவரது பெயர் பட்டியலையும் ஊடகங்களிலும் சபையிலும் முன்வைக்க
நடவடிக்கை எடுக்க வேண்டுமென சபாநாயகரிடம் வலியுறுத்தினர்.