Sat. Dec 7th, 2024

மதுபான விடுதியொன்றில் ஏற்பட்ட பாரிய தீ – 26 பேர் பலி

வட அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் வெராகுரூஸ் மாநிலத்தில் உள்ள மதுபான விடுதியொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

மெக்சிகோவின் வெராகுரூஸ் மாநிலத்தில் கோட்சாகோல்காஸ் துறைமுக நகரில் எல் காபலோ பிளான்கோ என்ற மதுசாலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கடந்த 27 ஆம் திகதி இரவு குறித்த மதுபானசாலையில் திடீரென தீ விபத்து இடம்பெற்றது. இந்த விபத்தில் 8 பெண்கள், 15 ஆண்கள் என மொத்தம் 23 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.

அத்துடன், 13 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்தநிலையில் தற்போது தீ விபத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்