Thu. May 21st, 2026

மடுல்சீமை விபத்தில் உயிாிழந்தவா்கள் எண்ணிக்கை 12 ஆக உயா்வு!

பதுளை- மடுல்சீமை பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 12ஆக உயா்ந்திருக்கும் நிலையில் 36 போ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

பசறை – மடுல்சீமை பிரதான வீதியின் 6ம் கட்ட பகுதியில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றது. பசறை பகுதியிலிருந்து எக்கிரிய பகுதியை நோக்கி பயணித்த

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு பாரிய வளைவு பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவருடன் 12 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர்.  விபத்தில் காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை

கவலைக்கிடமாக இருப்பதாகவும் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் பசறை மற்றும் பதுளை

வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed