மக்கள் வெள்ளத்தில் தோழ்களில் சுமந்து செல்லப்பட்ட சஜித் -பதுளை கூட்டத்தில்
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசாவை வரவேற்பதற்காக பதுளையில் நடைபெறும் கூட்டத்தில் பெரும்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளார்கள். கூட்டம் பதுளை வீல் பார்க் மைத்தனத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியது. கூட்டம் நடைபெறும் இடத்திற்கு மிகுந்த ஆரவாரமான வரவேற்புக்கு மத்தியில் வந்த சஜித் பிரேமதாசாவை, தோள்களில் சுமந்து மேடைக்கு அழைத்து செல்லப்பட்டார். மக்கள் அவரிடம் கடிதங்களை கையளித்த வண்ணமுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை எதிர்த்து சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதி வேட்ப்பாளர் ஆக அறிவிக்குமாறு கோரியே இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தலைமையிலேயே இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெறுகின்றது. இந்த கூட்டத்தில் கடசியின் முடிவுக்கு எதிராக பிரேமதாசாவை வேட்பாளராக அறிவிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன