Fri. Jan 17th, 2025

மக்களின் விருப்பமில்லாமல் காணி சுவீகாிப்பு. இழப்பீடு வழங்குவாராம் .

பலாலி விமான நிலையத்தை தரம் உயா்த்தும் பணிகளின்போது விமான நிலையத்திற்காக சுவீகாிக்கப்படும் காணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சா் அா்ஜின ரணதுங்க கூறியுள்ளாா்.

மேலும் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகளை விரிவுபடுத்தும் நோக்கில் 349 ஏக்கர் பொது மக்களின் காணிகள் 1950 – 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுவிகரிக்கப்பட்டன.

716 பேர் இக்காணிகளின் உரிமையாளர்களாக இருந்துள்ள நிலையில், அவர்களில் 215 பேருக்கு மட்டுமே இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஏனையவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதற்கான சான்றுகள் இல்லை. இக்காணிகளுக்கான உரித்தை உரியவர்கள் உறுதிப்படுத்தினால் இழப்பீடுகளை வழங்க நான் தயார்.

மேலும், பலாலி விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிக்கென 1984 ஆம் ஆண்டு 397 உரிமையாளர்களது

64 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டன, இவர்களுக்கான இழப்பீடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் அவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்படவில்லை

காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் இறுதி செய்யப்பட்டதும்  இவர்களுக்கான இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்