மகேந்திரனை நாடுகடத்துவதற்கான ஆவணங்கள் சிங்கப்பூருக்கு அனுப்பிவைப்பு
மத்திய வங்கி பிணை முறி விநியோக மோசடி சம்பந்தமாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநா் அா்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான ஆவணங்களை சிங்கப்பூா் அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் சிங்கப்பூாில் உள்ள இலங்கை
உயர்ஸ்தானிகராலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் பின்னா் குறித்த ஆவணங்கள், உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக சிங்கப்பூா் வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் . சட்டமா அதிபா் திணைக்களம் தொிவித்துள்ளது.