மகேந்திரனை நாடுகடத்துவது தொடர்பாக இலங்கை அரசின் ஆவணங்கள் கிடைத்தவுடன் பரிசீலிப்போம் -சிங்கப்பூர்
தேவையான தகவல் மற்றும் ஆவணங்கள் கிடைத்தவுடன் முன்னாள் மத்திய வங்கித் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை சிங்கப்பூர் அரசு பரிசீலிக்கும் என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது
இந்த ஆண்டு ஜனவரி 18 முதல் தகவல் மற்றும் ஆவணங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், இந்த ஆவணங்கள் இதுவரை சிங்கப்பூர் அரசுக்கு கிடைக்கவில்லை இலங்கை தூதுவராலையம் உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த ஆவணங்கள் கிடைக்கப்பெற்றவுடன் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை பரிசீலிப்போம்
சடடமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜெயரத்னவின் தகவலின்படி 21,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் வெளியுறவு அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சிற்கு சிங்கப்பூரில் தாக்கல் செய்யவதற்காக் கடந்த திங்களன்று ஒப்படைக்க பட்டதாக தெரிவித்தார்