மகேந்திரனை நாடுகடத்தும் ஆவணங்கள் சிங்கப்பூர் அரசிடம் ஒப்படைப்பு

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடுகடத்த கோர தேவையான ஆவணங்களை சிங்கப்பூர் அரசிடம் நேற்றையதினம் கையளிக்கப்பட்டது. சிங்கப்பூரில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகராலதின் ஊடாக இந்த ஆவணங்கள் நேற்று கையளிக்கப்பட்டதாக சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
மதியவங்கி பிணை மோசடி வழக்கில் நுண்ணலை ஆளுநர் அர்ஜுன்ம கேந்திரனை தேடப்படும் குற்றவாளியாக இலங்கை நீதிமன்றம் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்பொழுது சிங்கப்பூர் அரசு கோரிய 21,000 பக்கங்களை கொண்ட ஆவணம் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது