Fri. Mar 21st, 2025

மகாஜனாக் கல்லூரி 14 வயதுப் பெண்கள் உதைபந்தாட்டத்தில் தேசியத்தில் சம்பியன்

இலங்கைப் பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனம் நடாத்திய 14 வயதுப் பெண்கள் அணிகளுக்கிடையில் தேசியமட்ட  உதைபந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
14 வயதிற்கு உட்பட்ட தேசிய மட்ட உதைபந்தாட்ட போட்டி நேற்று  வெள்ளிக்கிழமை
கொழும்பு றேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணியை எதிர்த்து குருதாகல் மலியதேவ மகளிர் கல்லூரி மோதியது.
முதல் பாதியாட்டத்தில் ஆட்டம் ஆரம்பமாகி முதல் 5வது நிமிடத்தில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி வீராங்கனை சோபிகா முதலாவது கோலைப் பதிவு செய்தார். ஆனால் சற்றும் சளைக்காமல் போராடிய குருதாகல் மலியதேவ மகளிர் கல்லூரி அணி 10வது நிமிடத்தில் ஒரு கோலைப் பதிவு செய்து கோலின் எண்ணிக்கையை சமநிலைப்படுத்தினர். இரண்டாவது பாதியாட்டத்திலும் இரு அணிகளும் சம பலத்துடன் மோதினர். இதனால் இரு அணிகளாலும் மேலதிக கோல்களை பதிவு செய்ய முடியவில்லை. இதனால் சமநிலை தவிர்ப்பு உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணி 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்