மகளிர் தின வலைப்பந்தாட்டம் யாழ் பல்கலைக்கழக அணி வசமானது
மகளிர் வலைப்பந்தாட்ட கிண்ணத்தை யாழ் பல்கலைக்கழக அணி தம்வசப்படுத்தியுள்ளனர்.
யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கம் மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்ட அணிகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்ட தொடரினை நடாத்தியுள்ளனர்.
கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் யாழ் பல்கலைக்கழக அணியை எதிர்த்து வடபீனிஸ் அணி மோதியது.

நான்கு கால் பகுதிகளாக நடைபெற்ற ஆட்டத்தில் முதல் இரண்டு கால்பகுதி ஆட்டத்திலும் யாழ் பல்கலைக்கழக அணி ஆதிக்கம் செலுத்தினர். ஆனால் மூன்றாவது கால் பகுதியாட்டத்தில் வடபீனிஸ் அணியினர் தாமும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். இருப்பினும் ஆட்ட நேர முடிவில் யாழ் பல்கலைக்கழக அணி 52:31 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

இதில் 2026ம் ஆண்டுக்கான வலைப்பந்தாட்ட ராணியாக யாழ் பல்கலைக்கழக அணியை பிரதிநிதித்துவம் செய்த
டில்கி பெரேரா, சிறந்த பேற்றுக்கெய்பவராக யாழ் பல்கலைக்கழக அணியை பிரதிநிதித்துவம் செய்த ஜதுஷா,
சிறந்த தடுப்பாட்ட வீரராக யாழ் பல்கலைக்கழக அணியை பிரதிநிதித்துவம் செய்த பி.ஜானுயா மற்றும் சிறந்த மையப் பிரதேச வீராங்கனையாக வடபீனிஸ் அணியை பிரதிநிதித்துவம் செய்த சர்மிளா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்