மகளின் பட்டத்தை வாங்கிய தாய், நெகிழ வைத்த சம்பவம்
பட்டமளிப்பு விழாவில் உயிருடன் இல்லாத மகனின் பட்டத்தை கண்ணீருடன் வாங்கிய தாய். அனைவரையும் கண் கலங்க வைத்த சம்பவம் பதிவாகியுள்ளது.
யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தை (தற்போதைய வவுனியாப் பல்கலைக்கழகத்தை) சேர்ந்த சகோதர மொழி மாணவன் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருடைய தாயார் கண்ணீர்மல்க தனது மகனின் பட்டத்தை பெற்றுள்ளார்.
பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் விஞ்ஞான மாணிப் பட்டம் பெற்ற இளைஞன் உயிருடன் இல்லாத நிலையில்,
குறித்த பட்டத்தினை தாயாரிடம் கையளித்த போது தாயார் கண்ணீர்மல்க பட்டச் சான்றிதழை பெற்றதுடன் இச் சம்பவமானது அங்கிருந்தவர்களின் கண்களை கலங்கச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.