பௌத்த பிக்குவின் உடலை பிள்ளையார் ஆலய கேணியில் தகனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைதீவு மாவட்ட செயலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று
நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பௌத்த பிக்குவின் உடலை பிள்ளையார் ஆலய கேணியில் தகனம் செய்ததற்கும் , சட்டதரணிகள் மீது தாக்குதல் மேற்கொண்டமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்று (24) காலை 11 மணிக்கு முல்லைத்தீவு நகரில் பாரிய கண்டன போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
சட்டதரணிகள் மற்றும் தமிழர் மரபுரிமை பேரவை, நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம் பொதுமக்கள் இணைந்து இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இன்று காலை 11 மணிக்கு முல்லைத்தீவு நகரில் வைத்தியசாலையிலிருந்து ஆரம்பித்து நீதிமன்ற வீதியூடாக சென்று முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கண்டன போராட்டம் நடைபெறவுள்ளது.