Thu. Sep 17th, 2026

போலி இரத்தினகல் விற்பனை முயற்சி, மூவர் கைது

குருநாகல் பிரதேசத்தில் போலி இரத்தின கல் ஒன்றினை விற்பதற்கு முயற்சித்தவரை குருநாகல் பொலிஸார் கைது செய்துள்ளனர். குருநாகல், பமுனாவல பிரதேசத்தில் இருந்து கிடைத்த இரத்தினக்கல் என்று பொய் கூறியே இந்த போலி இரத்தின கல்லை விற்பனை செய்வதற்கு மேற்படி நபர் முயற்சித்துள்ளார் . இவரின் ஏமாத்து வேலையை அறிந்து கொண்ட நபரொருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்தே குருநாகல் பொலிஸார் இவரை கைது செய்துள்ளனர் . இந்த இரத்தினக்கல் மரீதியான பொருள் பிளாஸ்டிக் தன்மை கொண்ட ஒரு பதார்த்தத்தால் உருவாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்கள்
இதனையடுத்து குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் கிரியுல்ல பகுதியில் உள்ள இடமொன்றில் புதையல் தோண்டி எடுக்கப்பட்ட தகவலை தெரிவித்துள்ளார். இந்நிலையில்,குறித்த நபருடன் அங்கு சென்ற பொலிஸார் மேலும் இருவரை கைது செய்ததுடன் அவர்கள் வசமிருந்து தங்க புத்தர் சிலைகள் மற்றும் உடைந்த பித்தளை விளக்குகளுடன் ஆகியவற்றை கைப்பற்றினர். மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்

About The Author

Share This:

Leave a Reply