Fri. Feb 7th, 2025

போயா தினங்களிலும் விடுமுறை நாட்களிலும் தனியார் வகுப்புகளை தடைசெய்யும் சட்டமூலத்திற்கு எதிராக வழக்கு

போயா தினங்களிலும் விடுமுறை நாட்களிலும் தனியார் வகுப்புகளை தடைசெய்யும் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படட பத்திரத்துக்கு எதிராக , தனியார் கல்விநிலைய ஆசிரியர் ஒருவர் வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.. நேற்றைய தினம் உச்ச நீதிமன்றில் சமர்பிக்கப்பட்ட விசேட தீர்மான பத்திரத்தின் மூலமே இது தாக்கல் செய்யப்பட்டது.
மனுதாரர் அந்த மனுவில் தெரிவிக்கையில் ,இந்த தடை செய்யும் சட்டமூலம் கடந்த 23 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு கட்டளை நிரலில் பதியப்பட்டுள்ளது . இந்த சட்டமூலம் இலங்கை அரசியல் அமைப்பை பலவழிகளில் மீறுவதாகவும் , பல்வேறுபட்ட இன மற்றும் மதம் சார்ந்த மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், மாணவர்களிடையே பாரபட்ச்சம் காட்டுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் இந்த சட்டமூலம் மூன்றில் இரண்டு பராளுமன்ற பெரும்பான்மையுடன் சர்வசன வாக்கெடுப்பின் மூலமே நிறைவேற்றப்பட வேண்டும் என்று அந்த மனுவில் மனுதாரர் குறிப்பிட்டுளார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்