Sat. Feb 15th, 2025

போதைப் பொருட்கள் பாவனையைக் கட்டுப்படுத்த பல வகைகளிலும் உதவுவதற்கு தயாராக உள்ளதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்

போதைப் பொருட்கள் பாவனையைக் கட்டுப்படுத்த பல வகைகளிலும் உதவுவதற்கு தயாராக உள்ளதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.
வடமராட்சி பகுதியில் மாணவர்கள் உட்பட பலர் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்டவர்களுக்கு உளரீதியாக சிகிச்சை அளித்து மீளவும் பாதிக்கப்பட்டவர்களை சாதாரண நிலைக்கு கொண்டு வருவதற்கு தம்மாலான உதவிகளைச் செய்ய தயாராக உள்ளதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் கூட பருத்தித்துறையில் 14 வயது பாடசாலை மாணவன் ஊசிமூலம் போதைப்பொருளை கையில் நாளத்தினூடாக ஏற்றி பாவித்துள்ளான் . கடந்த வாரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவனிடம் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் அவனது வயது கூடிய நண்பர்கள் பாவிக்கும் போது தானும் பாவித்துள்ளதாக கூறியுள்ளான். அவர்கள் ஒரே ஊசியின் மூலம் அனைவரும் போதைமருந்து ஏற்றி உள்ளமையும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு வடமராட்சியில் பல மாணவர்களும் பாதிக்கப்பட்டு இருப்பது அறியப்பட்டுள்ளது . எனவே பெற்றோர்கள், ஆசிரியர்கள் இது தொடர்பாக சிகிச்சை அளிக்க உதவி தேவைப்படின் வைத்தியசாலையை நாடலாம்.
OPD , உளவளத்துணை பிரிவினை நாடவும்.
இதே போன்று பலர் போதைப்பொருட்களுக்கு அடிமையாக உள்ளார்கள் அவர்கள் இந்தப்பழக்கங்களில் இருந்து விடுபட நாம் உதவ தயாராக உள்ளோம். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவினூடாக சிகிச்சை பெறலாம். உள ரீதியான ஆலோசனை , மீண்டும் ஆரோக்கிய வாழ்வழித்தல் என்பன வழங்கப்படும். தகவல்கள் பெயர் விவரங்கள் ஒரு போதும் வெளியிடப்படமாட்டாது. இரகசியங்கள் பேணப்படும் எனவும் வைத்தியசாலை சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்