போதைப்பொருளுடன் இளைஞர் கைது நெல்லியடி பொலீஸாருக்கு குவியும் பாராட்டுக்கள்
நெல்லியடி பொலீஸாரின் அதிரடி நடவடிக்கையால் வடமராட்சி பகுதியில் 4 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மாத்திரையுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரணவாய் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே 4 லட்சம் ரூபா பெறுமதியான 520 போதைப்பொருள் மாத்திரைகளுடன் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமராட்சி அரச புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்
நெல்லியடி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி M.D எல்லாவல அவர்களின் பணிப்பின் பேரில் நெல்லியடி பொலீஸ் அதிகாரிகளான 34335 பிரபாத்,
4972 பிரசன்னா, 100180 திலின ஆகியோர் அடங்கிய குழுவினரால் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக சந்தேகிக்கப்பட்ட இளைஞருடன் போதைப்பொருள் வாங்கவுள்ளதாக லாவகமாக கதைத்து அவரை வடமராட்சி புறாப்பொறுக்கி எரிபொருள் நிலையத்திற்கு பின்னால் அழைத்து கைது செய்துள்ளனர்.
குறித்த இளைஞரை நாளை
பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இளைஞர்களுக்கு ஏற்டவிருந்த ஆபத்தை தடுத்த நெல்லியடி பொலீஸாருக்கு அப்பகுதி மக்கள் அனைவரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்