இலங்கை தேசிய பொலீஸ் நிலையத்தின் தலைமையின் அதிரடி முடிவு எடுக்கப்பட்டு 9 பிரதேச ஆய்வாளர்கள் D.I.G. உட்பட பல உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி
அஜித் ரோஹானா ஒழுங்கு மற்றும் நடத்தைப்பிரிவு அதிகாரியாகவும், டபிள்யூ.எம்.எம். விக்ரமசிங்க, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவுக்கும் டி.ஐ.ஜி பி.ஆர்.எஸ்.ஆர். நாகஹமுல்லா திருகோணமலையின் தலைமை பொலீஸ் தலைமை அதிகாரியாகவும்
பாலிஹக்கரா பொலீஸ் தலைமையகத்தின் பொறுப்பாளராகவும்
தனபால போதைப்பொருள் சிறப்புக் கிளையின் பொறுப்பாளராகவும்
பிரியந்த ஜெயகோடி குற்றப்பிரிவு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரியாகவும்
இரகசிய பொலீஸ் பொறுப்பதிகாரியாக பிரியந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், ஒரு மூத்த பொலீஸ் சூப்பிரண்டு, 9 காவல்துறை கண்காணிப்பாளர்கள், 12 உதவி போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 17 போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் மாற்றப்பட்டுள்ளதாக போலீஸ் தலைமையகம் உறுதிப்படுத்தியது.