பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம், இரு பொலிஸார் காயம்
இன்று (06) அதிகாலையில் 1 மணியளவில் அக்குரஸவில் உள்ள பனதுகம பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் இருந்த இரண்டு போலீஸ் அதிகாரிகள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கடமையில் இருந்த இரு பொலிஸாரும் , சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சைகை செய்திருந்தனர், இருப்பினும் அவர்கள் நிறுத்தாமல் சென்றனர். இதனால் அவர்களை பின்தொடர்ந்து துரத்திச்சென்றபோது ,பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டு தப்பி சென்றுவிடடார்கள்
இந்த சம்பவத்தில் காயமடைந்த இரு பொலிஸாரும் மாத்தறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.