பொலிகை ஒற்றுமை விளையாட்டு கழக விளையாட்டு விழா
பொலிகை ஒற்றுமை விளையாட்டு கழகம் மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக நடாத்தும் விளையாட்டு விழா நிகழ்வு நேற்றும் இன்றும் பொலிகண்டி ஆலடிச் சந்தியில் நடைபெற்றது. இதில் மறைந்த வீரர்களின் பெற்றோர்களால் கண்ணீருடன் சுடர் ஏற்றி வைக்கப்பட்டதுடன் கழக வீரர்கள் மற்றும் இன்றைய நிகழ்வு கழக தலைவர் தங்கவேலாயுதம் பரமானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக பருத்தித்துறை பிரதேச செயலர் ஆழ்வாப்பிள்ளை சிறீ, சிறப்பு விருந்தினர்களாக பொலிகண்டி கிழக்கு கிராம அலுவலர் ம.தர்சாந்தன், பருத்தித்துறை பிரதேச சபை உப தவிசாளர் கு.தினேஷ், பொலிகண்டி மக்கள் படிப்பக தலைவர் சி.குலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.