பொலிகண்டி மல்யுத்தம் மணற்காடு சென் அன்ரனீஸ் சாதனை
பொலிகண்டி ஒற்றுமை விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்ட மல்யுத்தப் போட்டியில் மணற்காடு சென் அன்ரனீஸ் விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த 5 வீரர்கள் தங்கப் பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.
பொலிகண்டி ஒற்றுமை விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்ட மல்யுத்தப் போட்டிகள் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் மணற்காடு சென் அன்ரனீஸ் விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த யு.டனுயன், யோ. நிதர்சன், அ.சிமிற்றாஜ், அ.அன்ரன்மகிழ்ராஜ், யோ.ஜெதுசன் ஆகியோர் முதலாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களின் பயிற்றுவிபாளர்களாக த.கங்காபதி, க.புனிற்ராஜ் ஆகியோர் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.