பொன்னாலையில் 3 வீடுகள் மீது ஒரே நேரத்தில் கல் வீசி தாக்குதல்

யாழ். பொன்னாலையில் உள்ள வீடுகள் மீது ஒரே நேரத்தில் கல் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இரவு 8 மணியளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதனால் பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வீதியில் உள்ள மூன்று வீடுகள் இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது
இதனால், ஓடுகள் உடைந்து கல் மற்றும் உடைந்த ஓடுகள் வீட்டின் உள்ளே வீழ்ந்த போதிலும், வீட்டில் இருந்தவர்களுக்கு எந்த வித காயங்களும் ஏற்படவில்லை.
இந்த தாக்குதல் பக்கத்தில் உள்ள வீடுகளில் இருந்தே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்று சந்தேகம் வெளியிடும் வீடு உரிமையாளர்கள் இச்சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்கள்