பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் விபத்து, சிறுவன் பலி, மற்றுமொருவர் படுகாயம்
அம்பாறை பொத்துவில், சியல்பலான்டுவ வீதியில் நேற்று மாலை அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிளொன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததையடுத்து மின்கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளை ஒட்டிசென்றவரும் பின்னால் உட்க்கார்ந்து சென்ற சிறுவனும் படுகாயமடைந்த நிலையில் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இருந்தபோதும் சிறுவன் பின்னர் மரணமடைந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மரணமடைந்தவர் பதுளை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் என பொலிஸார் தெரிவித்தனர்