பொது மேடையில் சரவணபவனை ஏளனம் செய்த சுமந்திரன்.
தமிழ் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஈ.சரவணபவன் இடையில் இருந்துவந்த முறுகல் நிலை இன்று பொதுமேடையில் அம்பலமாகியுள்ளது.
யாழ்.மாநகரசபைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,
பட்டதாரிகளால் கதிரைகள் நிரப்பபடும் என நக்கலாக தனது பத்திரிகையில் செய்தியை வெளியிட்டுவிட்டு நிகழ்வுக்கும் வந்திருக்கும் சரவணபவனுக்கும், பத்திரிகை ஏளனம் செய்ததையும்
பொருட்ப்படுத்தாமல் நிகழ்வுக்கு வந்துள்ளவர்களுக்கும் வணக்கம் என கூறி தனது உரையை ஆரம்பித்திருந்தார்.
இது தவிர பல்வேறு நிகழ்வுகளிலும் சாடைமாடையாக சரவணபவனை சுமந்திரன் வம்பிழுத்து வருவது தெரிந்ததே. கடந்த மாதமும் அவருடைய சீனாவுடனா வியாபாரத்தையும் பொதுமேடையில் இழுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது