பொது பயன்பாட்டு வீதியை பிடித்து வேலி, பிடுங்கி எறிந்த மாநகர முதல்வா்.
யாழ்.நகரை அண்டி மடம் வீதியில் ஒழுங்கை ஒன்றை தனியாா் ஒருவா் ஆக்கிரமித்துள்ள நிலையில் யாழ்.மாநகர முதல்வா் பிரச்சினைக்கு இரும்பு கரம் கொண்டு தீா்வு கண்டுள்ளாா்.
குறித்த நபா் ஒழுங்கையை ஆக்கிரமித்து வேலி அமைத்திருந்ததுடன், ஒழுங்கையை புனரமைக்க இடமளிக்காமல் தொடா்ச்சியாக தடைவிதித்துக் கொண்டிருந்தாா்.
குறித்த நேரடி விஜயத்தின் மூலம் குறித்த குடியிருப்பாளரினால் அடாத்தாக பிடிக்கப்பட்டிருந்த பகுதி (வீதி அமைப்புக்கு தடையாக பிடிக்கப்பட்ட பகுதி) உரிய ஆவணங்கள்
குறித்த நபரால் காண்பிக்கப்படாமையினால் உரிய சட்ட நியமங்களுக்கு அமைவாக மாநகர (JCB) மூலம் குறித்த வேலிகள் தகர்க்கப்பட்டு குறித்த பகுதி மக்களின்
பாவணைக்கான வீதி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.குறித்த விஜயத்தில் யாழ் பிரதேச செயலர், அப் பகுதி மாநகரசபை உறுப்பினர்,
அப்பகுதி கிராம சேவையாளர், , மாநகர பொறியியலாளர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், யாழ் மாநகர அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்டோர் இணைந்திருந்தனர்.