Sat. Dec 7th, 2024

பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு போராட்டம்

நாடு முழவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர் பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஊழியர்கள் முடிவெடுத்துள்ளார்

குறித்த போராட்டம் சென்னை பிராட்வேயில் உள்ள யூனியன் பாங்க் ஆப் இந்தியா முன் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10 பொதுத்துறை வங்கிகளின் இணைபு குறித்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். குறித்த அறிவித்தலின்படி 4 பெரிய வங்கிகளுடன், 6 சிறிய வங்கிகள் இணைக்கப்படுகின்றன.

பொது துறை வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்