பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கான “நாட்டா லீடர்” சின்னஞ்சூட்டல் நிகழ்வு
புகையிலை மற்றும் மதுசாரப் பாவனையை குறைப்பதற்காக செயற்படும் பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கான
“நாட்டா லீடர்” சின்னஞ்சூட்டல் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
புகையிலை மற்றும் மதுசாரத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பொதுசுகாதார பாதிப்புகளை குறைக்கும் முகமாக செயற்படும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கான “நாட்டா லீடர்” சின்னஞ்சூட்டும் நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நாடளாவியரீதில் அண்மையில் நடைபெற்றுள்ளது.

இரண்ராயிரத்து ஆறாமாண்டு இருபத்தேழாமிலக்க புகையிலை மற்றும் மதுபானம் மீதான அதிகாரசபைச் சடடத்தினால் நிறுவப்பட்டுள்ள அரச நிறுவனத்தினாலேயே(NATA) கடந்த 20ம் திகதி கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா பவுண்டசன் கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
நாடளாவியரீதியில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுதோறும் புகையிலை மற்றும் மதுபானங்களால் ஏற்படும் பொது சுகாதார பிரச்சனைகளைக் குறைப்பதற்காக அவற்றின் கிடைப்பனவை குறைத்தல், சிறுவர்களுக்கு இவை சென்றடையாது தடுத்தல் மற்றும் புகைப்பொருள் மற்றும் மதுபானமற்ற வலையங்களை உருவாக்குதல் உட்பட சட்டநடவடிக்கைகளிலும் முன்நின்றுழைத்துவரும் தெரிவு. செய்யப்பட்ட பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கே அன்றையதினம் சட்ட நுணுக்கங்கள் பற்றிய பயிற்சிப் பட்றையும் சான்றிதழ் வழங்கலும் சின்னஞ்சூட்டலும் நடைபெற்றன.
இதில் முந்நூறுக்கு மேற்பட்ட பொதுசுகாதார பரிசோதகர்கள் நாடளாவிய ரீதியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.