Sat. Sep 23rd, 2023

பேரூந்தை முந்திச்செல்ல முயன்று பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்

ஆனபல்லம பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் , கார் ஒன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொனராகலை வீதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் புத்தல திசையிலிருந்து பயணித்த பேருந்து ஒன்றை முந்தி செல்ல முயற்சித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிரே வந்த கார் மீது மோதுண்டுள்ளது. இதில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் , வெல்லவாய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் பலியான இளைஞர் ஆனபல்லம பகுதியை சேர்ந்த 22 வயதானவர் என்று தெரியவந்தது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்