பேரூந்து நடத்துனர் பொல்லால் அடித்து கொலை
பேரூந்து நடத்துனர் ஒருவரை இனந்தெரியாத நபர்கள் பொல்லால் தாக்கி அடித்துக் கொலை செய்துள்ளார்கள்.
இச்சம்பவம் நேற்று மாலை களனி பேரூந்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றது.
இதில் படுகாயமடைந்த நடத்துனர் முல்லேரியா மருத்துவ மனையில் அனுபதிக்கப்பட்டிருந்தார் . இவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் களனி பலப்பிட்டிய பகுதியை சேர்ந்த 41 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.