Mon. Oct 7th, 2024

பேரூந்து தடம்புரண்டத்தில் 20 பேர் காயம் , 4 பேர் கவலைக்கிடம்

தலவிலவிலிருந்து கம்பாஹாவுக்குச் சென்று கொண்டிருந்த பேரூந்து ஒன்று நேற்று இரவு (14) தடம்புரண்டத்தில் 20 பயணிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன .

செம்பேட்டா பகுதியில் உள்ள முண்டலம என்ற இடத்திலேயே இந்த விபத்து நிகழ்ந்ததுள்ளது. மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்திச்செல்ல முயன்றபோது எதிர் திசையில் வந்த ஆட்டோவுடன் மோதுண்டநிலையில் பேரூந்து தடம்புரண்டுள்ளது. இதனால் ஆட்டோவும் பலத்த சேதமைந்த நிலையில் ஆட்டோ ஓட்டுனரும் படுகாயமடைந்துள்ளார்

பேருந்தில் வந்தவர்கள் தலவிலவில் உள்ள புனித அன்னை தேவாலயத்திற்குச் சென்று திரும்பி வந்தவர்கள் என்றும் அவர்கள் வெலிவேரியா, திவூலப்பிட்டி, மினுவங்கோடா, நட்டாண்டியா மற்றும் வாலாஹபிட்டி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தார்கள்

காயமடைந்த அனைவரும் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்கள். இது தொடர்பான விசாரணைகளை முண்டலமா போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்