பேருந்தினுள் துப்பாக்கி சூடு, பயணி பலி
காலியில் உள்ள எல்பிட்டியா பகுதியில் இன்று (06) இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துக்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக போலீஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பேருந்தினுள் துப்பாக்கியுடன் பயணித்த நபர் ஒருவரே மற்றொரு பயணியான பாதிக்கப்பட்டவருக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் அழுத்கமவில் இருந்து எல்பிட்டிய நோக்கி சென்ற பேருந்தில் போகஹா சந்திக்கு அருகாமையில் இன்று காலை 8.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பலியானவர் 41 வயது நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சூட்டுசம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் பேருந்திலிருந்து குதித்து தப்பி ஓடியுள்ளார்.மேலும் சந்தேக நபரைக் கைது செய்ய போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.