பேச்சுவார்த்தை சுமுகமாக அமைந்தது, ஜனாதிபதி வேட்பாளர் குறித்து உரியநேரத்தில் அறிவிப்போம் -சஜித்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலின் முடிவுகள் எதிர்வரும் நாட்களில் தெரியவருமென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருது தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்கிரம, ராஜித சேனாரத்ன, ரஞ்சித் மத்துமபண்டார, கபிர் ஹசிம் ஆகியோர் கலந்துகொடிருந்தார்கள். இந்த சந்திப்பு ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்றது
கலந்துரையாடல் மிகவும் சிறப்பானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இடம்பெற்றது என்றும் கட்சி குறித்தும் , கட்சி எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் கட்சியின் எதிர்காலம் குறித்துமே இன்று கலந்துரையாடப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான மற்றும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விடயங்கள் உரிய நேரத்தில் எதிர்காலத்தில் அறிவிப்போம் என்றும் அவர் கூறினார்