Sat. Jan 17th, 2026

பெற்றோர்கள் பிள்ளைகளின் இயலுமைக்கு ஏற்ப இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன்

பெற்றோர்கள் பிள்ளைகளின் இயலுமைக்கு ஏற்ப இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார். நொதேன் விளையாட்டுக் கல்லூரியின் விருது வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை இயக்குநர் சசிக்குமார் தலைமையில் விளையாட்டு கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தனதுரையில் பிள்ளைகளின் இலக்கு நோக்கிய பயணத்தை பெற்றோரே தீர்மானிக்கின்றனர். பிள்ளையின் இயலுமை இயலாமையை புரிந்து கொள்ளாது செயல்படுகின்றனர். விளையாட்டில் கூட பிள்ளைகள் சுயமாக தமக்கு விரும்பிய விளையாட்டை தெரிவு செய்து விளையாட முடியாதுள்ளனர். அதனையும் பெற்றோர்களே தீர்மானிக்கின்றனர். பெற்றோர்கள் தமது விருப்பு வெறுப்புக்களுக்கும் ஏனையவர்களின் ஒப்பீடுகளுக்கும் ஏற்ப பிள்ளைக்கு சுமையை ஏற்றிவிடுகின்றனர். அது காலப்போக்கில் பிள்ளை தனது இலக்கை மறைத்து பெற்றோரின் சுமையை இறக்கி வைப்பதில் குறிக்கோளாக செயல்படுகின்றனர். அதனால் உடல் உள ஆரோக்கியத்தை இழந்து தனது குறிக்கோளை தள்ளாடவிடுகின்றனர். இதனை பெற்றோர் உணர்ந்து கொள்ளமுனைய வேண்டும்.

விலங்கினமான புலி கூட தான் துரத்தி செல்லும் மானைமட்டுமே வேட்டையாடும் அந்தமான் தனது கூட்டத்தினுள் சென்றாலும் தனது இலக்கை தவறவிடாது. ஆனால் மனிதர்களாகிய நாம் எமது இலக்கை விட்டு விட்டு தேவையற்ற விடயங்களை தெறிக்க விடுகிறோம். மனிதமாண்பை இழக்கிறோம், மனிதநேயத்தை தொலைக்கிறோம். நாகரீகத்தை காற்றிலே கரையவிடுகிறோம். இதனை அடுத்த தலைமுறைக்கு கடத்தாது விதிகளுக்கும் சட்டங்களுக்கும் கட்டுப்பட்டு வாழ விளையாட்டு கற்றுக்கொடுகிறது எனத்தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்