Thu. Jan 23rd, 2025

பெற்றோரிடம் பொய் சொல்லி குளிக்க சென்ற இரு மாணவர்கள் பலி

குருணாகல், பன்னல பிரதேசத்தில் பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு குளத்தில் குளிப்பதற்குச் சென்ற 15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.பம்புகுளிய பிரதேசத்தில் மணல் அகழ்வு காரணமாக மாஓயாவை அடுத்துள்ள குளத்தில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் இன்று (08/12/2023) மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் வெலிஹேன மற்றும் தல்வகொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த நிஹார கவிந்து நெத்மல் பீரிஸ் மற்றும் விஹங்க செனல் பெர்னாண்டோ புள்ளே ஆகியோர் ஆவார்கள்.

மஹதெல்லவின் பாடசாலை மாணவர்களான இவர்கள் இருவரும் நண்பர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மைதானத்தில் விளையாட செல்வதாக கூறிவிட்டு இருவரும் குளிக்க சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

பம்புகுளிய பகுதியில் உள்ள ஏரி போன்ற நீர்த்தேக்கத்திற்கு அருகில் இருவரது ஆடைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இரண்டு சைக்கிள்களும் இருந்தன. பொலிஸார் அப்பகுதி மக்கள் உதவியுடன் 2 சடலங்களையும் மீட்கப்பட்டதாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்