பெண் எழுத்தாளர் கோபிகையின் நூல் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது
பெண் எழுத்தாளுமை கோபிகையின் ‘அன்புடன்…’,
‘புழுதி’,
‘அவள்’,
எண்ணக் கிடங்கு’,
‘ககனம் கடந்த கானம்’, ‘வல்லினம்’
ஆகிய ஆறு நூல்களின் வெளியீட்டு விழா இன்று வெள்ளிக்கிழமை யா/ நெல்லியடி திரு இருதயக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
வவுனியா வடக்கு புளியங்குளம் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
முதன்மை விருந்தினராக எழுத்தாளரும் யாழ் மாநகர சபை அரச சித்த மருத்துவர்
வைத்தியர் தி. சுதர்மன் அவர்களும், சிறப்பு விருந்தினராக தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.கிருபாகரன், நெல்லியடி மத்திய கல்லூரி அதிபர் க.கிருஸ்ணகுமார், கிளிநொச்சி மத்திய கல்லூரி அதிபர் ச.பூலோகராஜா ஆகியோரும்,
கெளரவ விருந்தினர்களாக எழுத்தாளரும் ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளருமான செ.மகேஷ், யா/திருஇருதய கல்லூரி அதிபர் க.ஸ்ரீஸ்குமார், நெல்லியடி கிராம சேவகர் ரமேஷ், ஓய்வுபெற்ற அதிபர் ச.கிருஸ்ணன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.