Thu. Oct 3rd, 2024

பெண்நாய்களுக்கான கருத்தடை சிகிச்சையைமூலம் தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட்.

பெண்நாய்களுக்கான கருத்தடை சிகிச்சையைமூலம்
தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட்.
பெண்ணாய்களுக்கான நிரந்தர கருத்தடை சத்திர சிகிச்யையின் மூலம் தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி றேபீஸ் நோய் பரவுவதைக்க கட்டுப்படுத்தலாம். எனவே பெண்நாய்களை வளர்ப்பவர்கள் பொறுப்புணர்வுடன் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்த முன்வரவேண்டும் என தெரிவித்தார் பூநகரி பிதேச மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட்.
அண்மையில் சுகாதார திணைக்களத்தினால் பூநகரிப்பகுதியில் பெண்நாய்களுக்கான இலவச நடமாடும் கருத்தடை சத்திர சிகிச்சையானது பள்ளிக்குடா, நாலாங்கட்டை,அன்புபுரம் வலைப்பாடு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பொதுமக்களுக்கு இதுகுறித்து தெளிவு படுத்தும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
செல்லப்பிராணிகளாகவும், பாதுகாப்பிற்காகவுமென பெரும்பாலான வீடுளில் நாய்கள் வளர்க்கப்படுகின்றன. சில வீடுகளில் வீட்டு உறுப்பினர் தொகையைவிட அங்குள்ள நாய்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது.
நாய்களை அவற்றிற்குரிய  தடுப்பு மருந்துகளைக் கிரமமாக ஏற்றி அதற்கான பதிவு அட்டைகளை பேணவேண்டும். குட்டிகள் தேவையில்லையெனின் பெண்ணாய்களுக்கான கருத்தடை சத்திர சிகிச்சையை செய்யவேண்டும். நாய்களை தங்கள் வளாகங்களுக்குள்ளேயே வளர்க்க வேண்டும்.
ஒருவருக்கு நாய்கடித்தால் தாமதிக்காது வைத்திய சாலைக்கு சிகிச்சைக்கு செல்வதோடு நாய்கு தடுப்பு மருந்தேற்றிய விபர அட்டையை வைத்தியர் பார்வையிட கொடுத்தனுப்ப வேண்டும். கட்டாக்காலி நாய் கடித்திருந்தால் அதுபற்றி தெளிவாக வைத்தியரிடம் குறிப்பட வேண்டும். நாய்கடிக்காக ஆரம்பிக்கப்டும் தடுப்பு மருந்தேற்றலை இடைவிடாது முழுமையாக அந்த நபர் பெற்றுக்கொள்ள வேண்டும்.
நாய்க்கு விலங்கு விசர்நோய் இருந்தாலும் முழுமையான தடுப்பூசிகளை கடிக்குள்ளானவர் பெற்றால் அவர் பூரண பாதுகாப்பைப் பெறலாம். ஆனால் றேபீஸ்  நோய் அறிகுறிகள் மனிதரில் ஏற்பட்டபின் குணப்படுத்த எங்கும் எந்த சிகிச்சைகளும் இல்லை.
பொறுப்பற்றவிதமாக தடுப்பு மருந்துகள் கிரமமாக நாய்களுக்கு ஏற்றாமலும், குட்டி ஈன்றதும் குட்டிகளை சந்தைகளில் விடுவதும் ஆபத்தானதாகும். கட்டாக்காலி நாய்களின் குடித்தொகை அதிகரிப்பதனால் விபத்துகளும் றேபீஸ் மரணங்களும் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கின்றது.
எனவே பெண்ணாய்களுக்கு கருத்தடை சிகிச்சையை மேற்கொள்ளவும் வளர்ப்பு நாய்களுக்கான தடுப்பு மருந்துகளை ஏற்றவும் மக்கள் முன்வர வேண்டும் என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்