பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டத்தில் ஏ. அபிஷா தங்கம் வென்றார்
யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளனத்திற்கு உட்பட்ட பிரதேச செயலக இளைஞர் அணிகளுக்கு இடையிலான மாவட்ட மட்ட பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டத்தில் தெல்லிப்பளை பிரதேச செயலக இளைஞர் அணியை பிரதிநிதித்துவம் செய்த ஏ. அபிஷா தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளனத்திற்கு உட்பட்ட பிரதேச செயலக இளைஞர் அணிகளுக்கு இடையிலான ஆண்கள் பெண்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டத்தில் தெல்லிப்பளை பிரதேச செயலக இளைஞர் அணியை பிரதிநிதித்துவம் செய்த ஏ. அபிஷா தங்கப் பதக்கத்தையும்
சாவகச்சேரி பிரதேச செயலக இளைஞர் அணியை பிரதிநிதித்துவம் செய்த எம்.பதுமிகா வெள்ளிப் பதக்கத்தையும்
பருத்தித்துறை பிரதேச செயலக இளைஞர் அணியை பிரதிநிதித்துவம் செய்த ரி. பிருத்திகா வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளனர்.