Fri. Mar 21st, 2025

பெட்டிகள் கழன்றது தொியாமல் யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட புகைரதம்.

கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் வந்த புகைரதத்தின் பெட்டிகள் யாவும் கழன்ற நிலையில் புகையிரத இயந்திரம் தனித்து சுமார் அரை மணிநேரம் பயணித்த சம்பவம் வியாங்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதனால் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இரவு தபால் ரயில் புகையிரதத்தில் பயணிகள் அல்லோல கல்லோலப்பட்டனர். மேற்படி சம்பவம் குறித்து தெரியவருவதாவது

கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு இரவு தபால் ரயில் புகையிரதம் புறப்பட்டது இந்நிலையில்

இரவு 10.15 மணியளவில் வெயாங்கொடை பகுதியில் பெட்டிகள் யாவும் கழன்ற நிலையில் புகையிரத இயந்திரம் தனித்து பயணித்துள்ளது.

இதனால் புகையிரத பெட்டியிலிருந்த பயணிகள் மின்துண்டிக்கப்பட்ட நிலையில் அல்லோலப்பட்து தவித்தனர். இதையடுத்து புகையிரத இயந்திரம் அரை மணிநேரம் பயணித்த நிலையில்

பெட்டிகள் கழன்றதை அறிந்த இயந்திர சாரதி மீ்ண்டும் புகையிரத இயந்திரத்தை பெட்டிகள் கழன்ற இடத்துக்கு கொண்டு வந்தார்.

பெட்டிகளுடன் இயந்திரம் பொருத்தப்பட்டு புகையிரதம் யாழ்.நோக்கி புறப்பட்டது. இதனால் யாழ்ப்பாணத்துக்கு காலை 6 மணிக்கு வரவேண்டிய புகையிரதம்

காலை 8.15 மணிக்கே வந்தடைந்தது. இதனால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்