பூப்பந்தாட்ட சங்கத்தின் போட்டிகளில் யாழ்மாவட்ட வீரர்கள்
வடமாகாண பூப்பந்தட்ட சங்கத்தின் அனுசரனையுடன் இலங்கை பூப்பந்தாட்ட சங்கம் முதன் முறையாக தேசிய ரீதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 31, 01, 02, 03, 04ம் திகதிகளில் இடம்பெற்றது.
இதில் 30வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த L. றொபின்சன் 02ஆம் இடத்தையும், 30வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் இரட்டையர் பிரிவில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த R. றொபின்சன் – T. துசாந்தன் ஜோடி 02ஆம் இடத்தையும், B. ஜெனகன் – S. ரம்மியராகுலன் ஜோடி 03ஆம் இடத்தையும் பெற்று யாழ் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.