Mon. Feb 10th, 2025

பூநகாியில் உல்லாசத்துறை வலயம்..! விரைவில் அமையும் என்கிறாா் பிரதமா்..

பூநகாி நகாருக்கு அண்மையில் உல்லாசத்துறை வலயம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதா கவும், அதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமா் ரணில் கூறியுள்ளாா்.

மயிலிட்டி துறைமுகம் புனரமைக்கப்பட்டு இன்றைய தினம் மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.

இதன்போது மேலும் அவா் கூறுகையில்,  கடந்த ஆட்சிக்காலத்தில் வீதிகள் மட்டுமே புனரமைப்பு செய்யப்பட்டது.

ஆனாலும் எங்களுடைய ஆட்சிக்காலத்தில் நாம் பொருளாதார, சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்போம்  அதன் ஒரு அங்கமாகவே மயிலிட்டி துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்படுகிறது.

இதேபோல் பருத்துறை துறைமுகம், காங்கேசன்துறை துறைமுகம், குருநகா், காரைநகா் போன்ற துறைமுகங்களையும் நாம் புனரமைப்பு செய்யவுள்ளோம்.

இதேபோல் பூநகாி பிரதேசத்தில் சுற்றுலாத்துறை வலயம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.  அதற்கான இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்