பூநகரி பகுதியில் வர்த்தக நிலையத்திற்கு சீல்

பூநகரிப்பகுதியில்
உணவகங்கள், பல்பொருள் அங்காடிகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு
காலாவதியான மற்றும் நூகர்வுக்கு பொருத்தமற்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு
ஒருவர்த்தக நிலையத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
பூநகரி மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் தலைமையில் பொது சுகாதாரப் பரிசோதகர்களால் பூநகரி வாடியடி மற்றும் ஜெயபுரம் பகுதிகளிலுள்ள உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள் என்பன பரிசேதிக்கப்பட்டன. இதில் நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையிலும் காலாவதியாகிய நிலையிலும் உணவுப்பொருட்களை விற்பனைக்காக வெளிக்காட்டியும் களஞ்சியப்படுத்தியும் வைக்த்திருந்த ஊணவகம் மற்றும் பல்பொருள் அங்காடி உரிமையாளர்களுக்கெதிராக கிளிநொச்சி நீதிமன்றில் நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்கில் இருபத்தெட்டு குற்றங்களுக்காக ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டதோடு ஒரு பல்பொருள் அங்காடி நீதிமன்ற உத்தரவுக்கமைய பொது சுகாதார பரிசோதகர்களால் சீல் வைக்கப்பட்டது.