பூநகரியில் உணவு கையாளும் நிலையங்களில் திடீர் பரிசோதனை

பூநகரியில் உணவு கையாளும் நிலையங்களில் திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
பூநகரியிலுள்ள கடற்கரைச் சுற்றுலா உணவகம் மற்றும் வாடியடிப்பகுதி உணவகங்கள் போன்றவற்றில் பூநகரி மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் தலைமையிலான பொதுசுகாதார பரிசோககர் குழுவினால் திடீர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.

உணவகங்களின் சுகாதார மேம்பாட்டுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டதோடு சுகாதாரப் பாதுகாப்பு இன்றி தயார் செய்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிற்றுண்டிகள் கைப்பற்றி அழிக்கப்பட்டு விரைந்து சீர்திருத்துவதற்கான கால வரையறைகளும் வழங்கப்பட்டன.

உணவு கையாளும் ஊழியர்களின் தற்சுகாதாரம் மற்றும் உணவகங்களின் இறுதிக் கழிவகற்றல் போன்றவற்றை சரியாகக் கடைப்பிடிக்காதவர்கள் எச்சரிக்கப்பட்டதோடு தொடர் கண்காணிப்புகளில் இதைமீறி பொதுமக்களுக்கான உணவுச் சுகாதாரத்தை கேள்விக் குறியாக்குபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.