Tue. Oct 6th, 2026

பூநகரியில் உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகள்

பூநகரி பகுதியில் உணவுகையாளும் நிலையங்களில் குழுவாக உணவுப்பாதுகாப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

பூநகரி வாடியடி மற்றும் பள்ளிக்குடாப் பகுதிகளில் மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தலைமையில் பொதுசுகாதார பரிசோதகர்கள் குழுவாக உணவுப் பாதுகாப்பு பரசோதனைகளை கடந்த வியாளக்கிழமை முன்னெடுத்தனர்.

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருத்தல், உணவு தயாரிக்கும் போது வெப்பமான நிலையில் பொலித்தீன் பிளாஸ்டிக் பயன்படுத்துதல், உணவுக் கழிவுகளை திறந்த வெளியில் விட்டு இலையான் பெருக்கத்திற்கு காரணமாயிருத்தல், மூடியில்லாத குப்பைக் கூடைகளை பயன்படுத்துதல் மற்றும் கடலுணவு பதப்படுத்தலில் கொதி நீராவியுடன் பிளாஸ்டிக் வலைத் தட்டுகளைப் பயன்படுத்துதல் போன்ற சுகாதார ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடிய உணவு கையாளும் நிலைகள் இனங்காணப்பட்டு எச்சரிக்கப்பட்டதோடு வழக்குத்தாக்கல் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது உணவகங்கள், பலசரக்கு கடைகள் மற்றும் கடலுணவு பதனிடும் இடங்கள் உட்பட பல உணவு கையாளும் நிலையங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed