பூநகரியில் உணவுப்பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 6 உணவகங்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்
பூநகரியில்
உணவுப்பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 6
உணவகங்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் ரூபா தண்ட பணம் அறவிடப்பட்டுள்ளது.
பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் உணவுப்பாதுகாப்பு விதிமுறைகளைப் பேணாது இயங்கிய ஆறு உணவு கையாளும் நிலையங்களுக்கெதிராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.
பூநகரி மேற்பார்வை பொதுசுகாதர பரிசோதகர் ஜென்சன் றொனால்ட்டின் வழிகாட்டலில் பிவுகளுக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர்ஙள் இணைந்து அண்மையில் பூநகரி மற்றும் முழங்காவில் பகுதியில் உணவுப்பாதுகாப்பு பரிசோதனைகளில் ஈடுபட்டனர்.
இதன்போது மனிதநுகர்வுக்கு பொருத்தமற்ற விதத்தில் களஞ்சியப்படுத்தப்பட்ட பெருமளவான உணவுப்பொருட்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டதோடு உணவுப்பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கும் செயற்பாடுகளும் இனங்காணப்பட்டன.
இதில் ஆறு உணவுகையாளும் நிறுவனங்களுக்கு எதிராக இருபத்தைந்து குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டன.
இவை நீதிமன்றால் குற்றமாக உறுதிப்படுந்தியமையையடுத்து ஒருஇலட்சத்து இருபத்தையாயிரம் ரூபாய் தண்ணப்பணமாகவும் அறவிடப்பட்டது.