Wed. Mar 11th, 2026

புலோலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரகசியமாக கொடுக்கப்பட்ட பெட்ரோல்

நேற்று வடமராட்சி புலோலி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் சுகாதார பணியாளர்களுக்கான எரிபொருள் வழங்கும் பொழுது முறைகேடாக எரிபொருள் பாதுகப்பட்டு வழங்கப்படுள்ளதாக அங்கிருந்த பொது மக்களால் தெரிவிக்கப்படுள்ளது.

அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இருந்து கொல்கலன் ஒன்றில் பெட்ரோலை அருகில் உள்ள பலசரக்கு கடைக்கு பல தடவைகள் எடுத்து சென்று பதுக்கி உள்ளார்.

இது பொலிஸாரும் இராணுவத்தினரும் பார்த்திருக்கும் பொழுதே இடம்பெற்றதாக பொதுமக்கள் குற்றம் சாடினார்கள்.

இந்த நிலையில் இறுதியில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் தீர்ந்து விட்டதாக கூறி வீட்டுக்கு அனுப்பி விட்டு, பதுக்கிய எரிபொருளை எல்லோரும் சென்ற பின்னர் வேறு நபர்களுக்கு வழங்கி உள்ளதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளார்கள்.

இது தொடர்பான புகைப்படம் மற்றும் காணொளி பொதுமகன் ஒருவரால் நியூஸ் தமிழ் செய்தி தளதுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்று அந்த பொதுமகன் ஆதங்கம் வெளியிட்டார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed