புலோலியில் வீடுபுகுந்து தாயையும் பிள்ளைகளையும் பயமுறுத்தி 24 பவுண் நகை கொள்ளை
இன்று விடியற்காலை 1.30.மணியளவில் புலோலி உபயகதிர்காம் பகுதியில் இத்தாலியில் வேலை செய்யும் ஒருவரின் வீட்டில் தாயும் பிள்ளைகளும் நித்திரையி ல் இருக்கும் பொழுது நான்கு பேர் வீடுபுகுந்து குசினி வழியாக வீடிற்குள் சென்று தாயையும் பிள்ளைகளையும் பயமுறுத்தி வாயை பொத்தி 24. பவுணும் 15000. ருபா பணமும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மோப்ப நாய் உதவியுடன் தேடிய பொழுதும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. தற்பொமுது பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொள்கின்றனர் . பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் களவு சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்றபோதும் பொலிஸாரினால் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது