Mon. May 18th, 2026

புலம்பெயர் தமிழ் மாணவர்களுக்கான அறிவாடல் போட்டி முடிவுகள்

தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மாணவர்களுக்காக இந்த ஆண்டும் இரண்டாவது முறையாக அறிவாடல் தமிழ் வினாவிடை போட்டி  அக்டோபர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்றது. அறிவாடல் ஒருங்கிணைப்பு குழு மூலம் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் கல்வி கழகங்களின் ஆதரவுடன் இந்த நிகழ்வு இந்த ஆண்டும் திறம்பட நடாத்தி முடிக்கப்பட்டது.

புலம்பயர்ந்து வாழும் தமிழ் இளையோர்களுக்கு தாயகத்தின் வரலாறு மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் மற்றும் தாயக விடுதலை போராட்டம் கடந்து வந்த பாதை போன்றவற்றை அறியபடுத்துவதற்காக அறிவாடல் ஒருங்கிணைப்பு குழுவால் இந்த நிகழ்வு இணையவழி மூலம் நடாத்தி முடிக்கபட்டநிலையில்  இதன் முடிவுகள் நேற்றைய தினம் வெளியிடபட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டு வயதிலும் முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள் அறிவிக்கபட்ட நிலையில் அவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் எதிர்வரும் மாவீரர் நாள் நிகழ்வில் அந்த அந்த நாடுகளில் வழங்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

About The Author

Share This:

Leave a Reply

You may have missed