புலமைப் பரீட்சை கொடுப்பனவு 250 ரூபாவால் அதிகரிப்பு
5ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கான கொடுப்பனவை 250 ரூபாவால் அதிகரிக்க அமைச்சரவை அதிகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் படி இவ்வளவு காலமும் வழங்கப்பட்ட புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கொடுப்பனவு 500 ரூபாவாக இருந்தது. நேற்றைய கூட்டத்தின் தீர்மானப்படி 250 ரூபா அதிகரிக்கப்பட்டு 750 ரூபா வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.